கவிதை 15: அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்

பர்சை பரிகுடுக்க தயாராகும் அளவிற்கு
அழகாய் இருக்கிறாய்,

உன் அழகை மெருகூட்ட
வண்ண வண்ணமாய்
சின்ன சின்னதாய்
சிலபேர் உன்னை சுற்றி!,

உன் மெல்லிய கன்னத்தை கில்ல
யாருக்குத்தான் ஆசை வராது,

ஏழை ஆனாலும் பணக்காரன் ஆனாலும்
பாரபச்சம் இன்றி பழகுகிறாய்,

நீ இல்லாமல் ஏங்குவோர் சிலர்,
உனக்காக காத்திருப்போர் பலர்,

அதில் நானும் ஒருவன்,

அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்,
உன்னை எனக்கு கொடுத்ததற்கு..

இப்பொழுது நீ என் மடியில்,
உன்னை மெதுவாய் அனுபவிக்க துடிக்கிறது என் உறுப்பு ஒன்று,
காலம் கடத்த வேண்டாம் வா!...
ம்ம்ம்ம்ம்ம்ம்.................

என்ன ருசி!
என்ன ருசி!

நாவில் தேன் வார்க்கிறது
இந்த இதமான இட்லி,
தேங்காய் சட்னியுடன்!....

2 comments:

  1. நாவில் தேன் வார்க்கிறது
    இந்த இதமான இட்லி,
    தேங்காய் சட்னியுடன்!....

    ஞாபகப்படுத்திடீங்க... இப்ப நா எங்க போய் சாப்பிடறதாம்?

    கவிதை அருமை நண்பா!

    ReplyDelete
  2. நன்றி கலை அண்ணா!...

    இப்ப இந்த வறிய மறுபடியும் படிக்க வச்சு,
    நீங்க எனக்கு ஞாபகப்படுதிடீங்க அண்ணா!..

    ReplyDelete