கவிதை 17: எதிர் வாசல்

விடியலை விட்டு விலகி
எழுந்தேன் அன்று,

வெளியே கூச்சல் கேட்டு
விரைந்தேன் வாசலுக்கு,

எதிர் வாசலில் வந்தவண்ணமாய்
உறவினர்கள்,

வீதி முழுவதும் விதவிதமாய்
விவாதங்கள்,

என்னவென்று கேட்பதற்கு என்
வீட்டிலோ யாரும் இல்லை,

தூரத்தில் தெரிந்த நண்பன்
நெருங்கி வந்து
கட்டியணைத்து
தோள் தட்டியபடி,

"டேய் மச்சி நம்ப ஆளு வயசுக்கு
வந்துட்டா டா "

என்றான் வெட்கத்துடன் !..

கவிதை 16: காதல் தோல்வி

தொடங்கிய கவிதை
ஒன்று
வார்த்தை
இல்லாமல் நின்றது !,

எழுதிய பாடல்
ஒன்று இசை
இல்லாமல்
வெறும் எழுத்தானது !,

பலிக்காமல் போனது
கனவொன்று !,

கையில் கிடைக்கும்
முன்னே
கரைந்து விட்டது
ஒரு பனிக்கட்டி !,

கூட்டமாய் காய்ந்தது
கொத்தாக வாங்கிய
மலர்கள் !.

நேற்று வரை
ஈர்ப்பு விசையை
பொய்யாக்கி
காற்றாய் பறந்த
இடங்களில்
இன்று காலனி கூட
பாரமாக தெறிகிறது !,

உன் பார்வையில்
தொடங்கிய
என் வாழ்க்கை,

முடிந்துவிட்டது
உன் வார்த்தையில்!.......................
.........................................


இப்படி காலங்காலமாய் கவிதை
எழுதியவர்கள்
தான் எத்தனை பேர் !...

இறைவா இன்னுமா ஆண்களின் குரல்
கேட்க்கவில்லை உனக்கு !...

ஆண் நெஞ்சை புரிந்து கொள்வதற்கு
பெண் அறிவை மாற்றி எழுதக்கூடாதா ?....

:)

கவிதை 15: அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்

பர்சை பரிகுடுக்க தயாராகும் அளவிற்கு
அழகாய் இருக்கிறாய்,

உன் அழகை மெருகூட்ட
வண்ண வண்ணமாய்
சின்ன சின்னதாய்
சிலபேர் உன்னை சுற்றி!,

உன் மெல்லிய கன்னத்தை கில்ல
யாருக்குத்தான் ஆசை வராது,

ஏழை ஆனாலும் பணக்காரன் ஆனாலும்
பாரபச்சம் இன்றி பழகுகிறாய்,

நீ இல்லாமல் ஏங்குவோர் சிலர்,
உனக்காக காத்திருப்போர் பலர்,

அதில் நானும் ஒருவன்,

அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்,
உன்னை எனக்கு கொடுத்ததற்கு..

இப்பொழுது நீ என் மடியில்,
உன்னை மெதுவாய் அனுபவிக்க துடிக்கிறது என் உறுப்பு ஒன்று,
காலம் கடத்த வேண்டாம் வா!...
ம்ம்ம்ம்ம்ம்ம்.................

என்ன ருசி!
என்ன ருசி!

நாவில் தேன் வார்க்கிறது
இந்த இதமான இட்லி,
தேங்காய் சட்னியுடன்!....

கவிதை:14 - வாழ்கையின் எடுத்துக்காட்டுகள்

எதிரிகள் இல்லாத எல்லை,
குடித்து விட்டு கூச்சலிடாத குடிகாரன்,
தன் உடலை ஒளிபரப்பாத பெண்,
மாடி வீடு இல்லாத முதலாளி,
பிச்சை பாத்திரம் ஏந்தாத பிளாட்பாரம்,
உதிரம் உறிஞ்ஜாத உயிர்,
எதையும் எதிர் பாக்காத நட்பு,
ஊடல் இல்லாத உடன் பிறந்தோர்,
விளம்பரப் படுத்திக்கொல்லாத மனிதன்,
மாணவனுக்காக காத்திருக்கும் ஆசிரியர்,
வஞ்சம் இல்லாமல் பாராட்டுபவன்,
படுத்தவுடன் உறங்குபவன்..........................

இவை அனைத்தும் பள்ளியறையில்
ஆழமாய் போதிக்கப்பட
வேண்டிய எடுத்துக்காட்டுகளே!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

கவிதை:13 - நட்பின் பரிசு

தனிமையில் தழுவிய வாடைக் காற்று,
முதல் பிறந்தநாள் வாழ்த்து அட்டை,
எதிர் பாராத வந்த கோடை மலை,
எதிர் பாரத நேரத்தில் வந்த விரும்பிய விருந்தாளி,

இவைகள் தந்த
மன நிரைவும்,
புன்னகையும்,
பெருமிதமும் தான்,

எதிர் பாராமல் வந்த உன் நட்பும்,
எதிர் பார்ப்பே இல்லாத உன் அன்பும்,
எனக்கு பரிசாக அளித்தது.........

கவிதை - 12

உன் ஒவ்வொரு அசைவுக்காக காத்திருந்தேன்,
நீ சொல்வதை எல்லாம் கேட்டேன்,
நில் என்றாய், மௌனமாய் நின்றேன்,
வா என்றாய், கண் இமைக்கும் நேரத்தில் வந்தேன்,
போ என்றாய், உன் கண்ணில் படாமல் இருந்தேன்.
இன்றோ உன் ஆசைகளை பூர்த்திசெய்ய முடியாமல்
நோய் வாய் பட்டு கிடக்கிறேன்....
இன்றாவது என்னை கவனிக்க மாட்டாயா ?

என்று அந்த இளைஞனிடம்
குமறியது அவன் செயல் இழந்த நின்ற கணிப்பொறி!....

ஹைக்கூ - 1

நான் சிரித்தால் நீ மகிழ்கிறாய்,
நான் கண் கலங்கினால் நீ மனம் உடைந்து விடுகிறாய்,
என் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா ?

என்று என்னை கேட்கிறது முகக்கண்ணாடி
குளியல் அறையில் !....

கேள்விகளை கேட்க்க

அவள் சந்தேகத்தை தீர்பதர்க்காக தான் பேசினேன்,
இன்னைக்கு கண்டிப்பாக சீக்கிரம் வந்திடுவேன்,
காலைக்கு தோசை செஞ்சிறு,
சரி உன் நண்பன் கல்யாணத்துக்கு இரெண்டு பேரும் போலாம்,
இந்த வாரம் சனிக்கிழம உங்க அம்மா வீட்டுக்கு போலாம்,
உன் சமையல் சூப்பர் சாம்பார்ல தான் கொஞ்சம் உப்பு பத்தல,
சரி குளிக்கறேன் கத்தாதே,

இப்படி சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் பதில்கள்
கேட்பதற்கு தான் நீ இங்கு இல்லை....
எப்போது வரப்போகிறாய் கேள்விகளை கேட்க்க......

காத்திருக்கிறோம்

மண்ணில் விதை மழைக்காக காத்திருப்பது போல்,
மேஜையில் காகிதம் பேணாவிற்க்காக காத்திருப்பது போல்,
கைதி விடுதலைக்காக காத்திருப்பது போல்,
பட்டதாரி வேலைக்காக.........
கூலி சுமைக்காக...........
மாணவன் தேர்வு முடிவுக்காக.........
நாடு நல்ல தலைவனுக்காக............
திருடன் இருளுக்காக.............
தோல்வி வெற்றிக்காக............
புகழ் பதவிக்காக.............
குழந்தை பாலுக்காக............
என் தாய் எனக்காக காத்திருப்பது போல்,

உலகம் உனக்காக காத்திருக்கிறது
உறுதியாய் எதிலும் இறங்கு

வென்று விடலாம் யாவரையும்........

எல்லாம் ஒன்று தான்

வள்ளுவன் வடித்தித்த திருக்குறள்,
கம்பன் கவி பாடிய ராமாயணம்,
பிகாசா வரைந்த ஓவியம்
பில் கேட்ஸ் எழுதிய Windows,
நீ எழுதிய கவிதைகள்,
நான் எழுதிய உன் பெயர்,

எல்லாம் ஒன்று தான்,
என்னை பொருத்த வரையில்!..

நாம் வந்த பாதை

காலை சாலையில் கண்டோம்,
மாலை வீதியில் கைகுலுக்கினோம்,
ஒன்றாய் பயணித்தோம்,
பாடத்தை பிரித்துக்கொண்டோம்,
உணவை மாற்றிக்கொண்டோம்,
என் எதிரிகளை நீ வெறுத்தாய்,
உன் எதிரிகளை நான் வெறுத்தேன்,
காதல் இல்லை நட்பென்று ஊரை ஏமாற்றினோம்,
நம்மையும் ஏமாற்றிக்கொண்டோம்,
துன்பத்தில் தோள்கொடுத்தோம்,
விடுமுறையை வெறுத்தோம்,
இரவானால் நிலவுடன் பேசினோம்,
அதற்க்கு கை அசைத்தோம்,
பின்பு முகம் காண்பாதற்கு
விண்ணில் விடியலை தேடினோம்,

இன்று நம் கல்லுரி இறுதியாண்டு சுற்றுலா
மலை உச்சியில் நிற்கிறோம்,

என் பெயரை உரக்கச் சொன்னாய்
நான் உன் பெயரை சொல்லி முடித்தேன்,

அடுத்தது என்னவென்று ஏங்குகிறாயா ?.

வா நம் உதடுகள் நான்கும் ஒன்றாய்
சத்தம் இல்லாமல் பேசட்டும்!.....

சிறிய மொக்கை ....

விடிந்து மூன்று மணிநேரம் ஆயிற்று! ,
சூரியன் சுட்டெறிக்க தொடங்கிற்று!,
போர்வை இழுத்து போர்த்தி உறங்கிக்கொண்டு இருக்கிறான்
சோம்பேறி!,

என்று நினைக்கிறாயா ?..,

இமை திறந்தால் கனவு கலைந்துவிடும்...
உன்னை விட்டு பிரிய மணமில்லை கனவிலும் கூட..
அதனால் தான் என் இரவை நீட்டிதுக்கொண்டிருக்கேறேன் போர்வை போர்த்தி்..

குழம்புகிறேன்

வீரம் என்பது பெண்மையின் அடையாளம்
வெட்க்கம் என்பது ஆண்மையின் அடையாளம்

இல்ல இல்ல இல்லல

வீரம் என்பது ஆண்மையின் அடையாளம்
வெட்க்கம் என்பது பெண்மையின் அடையாளம்

இப்படித்தான் குழம்புகிறேன் உன்னை பார்த்ததில் இருந்து!..

எனக்கு ஆயிரம் வேலைகள்

உன்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை,
மன்னித்துவிடு, எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது,
அவை அனைத்தும் உன்னை பற்றி நினைப்பதே!

சொல்வதை நம்பியதில்லை..

என்னை பற்றி மூன்றாவது மனிதன் சொல்வதை நம்பியதில்லை..
ஆனால் இன்று நம்பாமல் இருக்க முடியவில்லை...
நான் உன்னை காதலிக்கிறேனாம்!..

பத்தோடு பதினொன்றாக

என் கரையை கண்டுகொள்ளாமல்
உன் கரை நோக்கி நகர்கிறது என் கால்கள்!,
எழுதிய code-ஐ அழித்து விட்டு
உன்னை பற்றி கவிதை எழுதுகிறது என் விரல்கள்!,
நான் சொல்ல வந்த வார்த்தையை உதறிவிட்டு
உன் பெயரை முனுமுனுக்கிறது என் உதடுகள்!
விரும்பிய பாடலை நிறுத்திவிட்டு
உன் குரலை ஒலிக்கிறது என் காதுகள்!
மல்லிகை பூவை முகர்ந்தால்
உன் வாசனை துளைக்கிறது என் மூக்கை!
இவை அனைத்தும் உன்னை காதலிக்க
என் மனம் மட்டும் என்ன விதிவிளக்கா ?
பத்தோடு பதினொன்றாக அதுவும் உன்னை நேசிக்கிறது!...

உன் வருகை

வருகை பதிவில் உன் பெயரை பச்சை குத்தியது போல் பதிவு செய்தாய்,
ரசித்தேன்!,
சிந்தித்தேன்!,
சிலிர்த்தேன்!,
சிரித்தேன்!,
அந்த வருகை பதிவு நானாக இருந்திருந்தால்...

உன் விழியன் ஒளியில் ஒரு ....

உன் விழியன் மொழி புரியவில்லை
புரிந்தாலும் பேசப்போவதில்லை
பேசினாலும் காதலிக்கப்போவதில்லை,
காதலித்தாலும் மனக்கபோவதில்லை,
இருந்தாலும் உன் விழியன் ஒளியில் ஒரு மயக்கம்..