நகரம் ஒரு பார்வை - I

"நகரம் "

1.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
ஆம் இங்கு வாயுள்ள பிள்ளை
மட்டுமே பிழைக்கும் !

2.

பணம் பத்தும் செய்யும்
இங்கு பதினொன்றும் செய்யும்
முயன்றால் பன்னிரெண்டும் செய்யும் !

3.

ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை
என்ற வாசகம் ஊரெங்கும் எழுதப்பட்டிருக்கிறது
ஆங்கிலத்தில் "Save Energy ".!

4.

வெள்ளி இரவு மக்கள் கூட்டம் அலை மோதும்
பிரசாதம் வாங்க,
கோவிலில் அல்ல
சாராயக் கடையில் !

5.

அரை குறை ஆடைகளுக்கு நடுவே
அழகழகாய் பெண்கள் ,
அவர்களை உரசாமல்
கடப்பதில்லை கண்கள் !

6.

காகிதம் கசங்கியது
கணிப்பொறியின் ஏளனச் சிரிப்பால்
ஹ்ம்ம்... என்னைப் பார்த்த அதே
சிரிப்பு !

7.

விபச்சாரிகளுக்கு மட்டும் அல்ல
இங்கு பிச்சைக்காரர்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறது
சிகப்பு விழக்கு !

சில வார்த்தைகள் என் பார்வையில்

- மொழியின் பெயர்
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்
அதற்க்கு பல ஆயிரம் அர்த்தங்கள்
இவைகளுக்கெல்லாம் ஒரு பெயர்
அர்த்தமே இல்லாமல் !

- அம்மா
நான் வைத்த
முதல் பெயர் !

- மழை
குடைகள் நீராடும்
விழா !

- கண்ணீர்
நிறம் இல்லாத
இரத்தம் !

- Orkut, Facebook
நாகரீக குட்டிச்
சுவர் !

- நிர்வாணம்
தடை செய்யப்பட்ட
ஓவியம் !

- பொய்
சிந்தனையாளர்களின் கடவுள்
வாழ்த்து !

கவிதைகள் - சிந்தித்தவைகளில் சில

- மனிதாபிமானம்
சாலை ஓரம் அம்மணமாய் ஒரு பைத்தியக்காரன்
அவன் மானம் காப்பாற்றப்படுகிறது
அவனைக் கடக்கும் கண்கள் மூடுவதால் !

- மரியாதை
முத்தம்மிட்டுக் கொண்டிருந்தவர்கள்
விலகிக் கொண்டார்கள்
என்னைக் கண்டதும்.............
என்னைக் கடந்ததும் மீண்டும்
முத்தமிட ஒட்டிக் கொள்கிறார்கள்
வானமும் பூமியும் !

கவிதை:அண்ணன் தம்பி

கார சாரம்
என் சம்சாரமும்
உன் சம்சாரமும்
நம் வீட்டுக் கட்டுத்தரையில் !

ஆணாய் தடுக்கப்போன நாம்
தரையில் விளையாடினோம்
அதே இடத்தில்
எப்போதும் விளையாடியதை....

சிறு வித்யாசம் தான்!

அன்று நம்மை சுற்றி நண்பர்கள்!
இன்று உறவினர்கள்!

அன்று கிழிந்தது ஸ்கூல் சட்டை!
இன்றோ கிழிகிறது
காலை புதியதாய்
உடுத்திய பொங்கல் சட்டை!

அடுப்பங்கரையில் ஆரம்பித்தது
ஆட்டுமந்தையில் நிற்கிறது!
அடுத்து என்னவென்று
ஆவலாய் ஊர் மக்கள்!

ஏன் என எதுவும் தெரியாமல்
நம் பிள்ளைகள்
மச்சினியின் கைகளுக்குள் !
நாளை ஒன்றாய்
விளையாடுவோம் என்ற
ஆசையோடு,
அது பேராசை என்று புரியாமல் !

இருக்கும் கூரை கூர் போடப்படுமோ ?
தவிப்பில் தடம்
ஏதும் தெரியாமல் நடை
தளர்ந்த தாய் தகப்பன்
தார தாரையாய் கண்ணீருடன் !

இவை அனைத்தும் நம்மை சுற்றி நடக்க
நம் விளையாட்டு மட்டும் முடியவில்லை

தடுப்போர்
தாமதித்ததால்

ஒன்றை உணர்ந்தேன்
நீ என்னை தரையில்
தள்ளும் முன்

எங்கே நான் கீழே
விழுந்து விடுவேனோ
என்ற உன் பயத்தை !

கவிதை:கோடை மழை


ஒரு ஏட்டில் எழுதப்பட்ட நான்கு வரிகள்
உரக்க வாசித்தப்பின்
உயிர் பெறுகிறது இறந்துபோன மயிர்களும்
"நாளை முதல் ஜூன் 6 வரை முழு
ஆண்டுத் தேர்வு விடுமுறை" !


கேள்வியே புரியாதவன்
வேகவேகமாய் கிறுக்குகிறான்
கேள்விகளுக்கு விடைத் தெரிந்தவன் போல


கடைசி பரிட்ச்சையின் விடைத்தாளில்
கடைசி வரியில் முற்றுபுள்ளி வைத்துவிட்டு பெருமூச்சு
எவரெஸ்ட் மலை உச்சியில் கொடி நட்டவன் விட்ட அதே மூச்சு !


விடைத்தாளை வாத்திச்சி கையில் விட்டெறிந்துவிட்டு !
காலடி எடுத்து வைக்கிறான்
அவன் ஒரு வருடமாய் சிறை பட்டுக் கிடந்த
வகுப்பறையை விட்டு

புத்தகங்களின் பக்கங்கள் பறக்கிறது !
இதழ்களில் புன்னகைகள் தெறிக்கிறது !


இவர்கள் விடுதலை கொடுத்த பேனா மையும்
இவர்களை குஷி படுத்துகிறது
அடுத்தவன் சட்டையில் கோலமிட்டு !


போட்டிப் போட்டு படிக்காத கூட்டம்
போட்டிப் போட்டு சந்தோஷப் படுகிறது !


போதாகுறைக்கு ஒருவன்
சட்டை வேற கிழிந்து தொங்குகிறது
இவர்களை இன்னும் சிரிக்க வைக்க !


கை, கண், கால், வாய் என
உடம்பே சிரிக்கிறது !


வருடத்தில் ஒரு முறை வரும்
இந்த காட்ச்சியைப் பார்க்கத்தான்
ஏழைச் சூரியனும் பூமியில் தரை இறங்க முயற்சிக்கிறான்
இதை உணர்த்துகிறது
கோடை வெயில் !


இதை பலர் புரிந்து கொள்வதில்லை
என்பதனால் கண் கலங்குகிறது
கோடை மழையாய் !







அழகு

ஹைகூக்கள்: உறக்கம்

தலைப்பு இவருது



1.
சிலர் வருண பகவான் அவதாரம் எடுக்கும் நேரம்
படுக்கையை ஈரமாக்க !

2.
தலையணையும் தம்மன்னா(நடிகை) ஆகும்
சற்று தலை தூக்கிப் பார்த்தால் நண்பனின்
தலையும் அதே தலையணையில் !

3.
தேவதைகள் உலா வருவார்கள்
தெருவில் பார்த்த அவளும் அதில் அடக்கம்
அவள் குழந்தையோடு !

4.
அரை தூக்கத்தில் தேடுவான் பின்பு
அரைமணி நேரம் கழித்து
அறை முழுவதும் தேடுவான்
அவன் லுங்கியை !

5.
இரவு முழுவதும் குடித்து விட்டு குத்தட்டாம்
காலையில் மடிந்து கிடக்கிறது
கொசுக்கள் !



கவிதைகள்: ஓர் நிகழ்வின் நினைவுகள்

1.

சாதனைக்கு சன்மானமாய்
சான்றிதழ்கள்

பிறப்பு,
படிப்பு,
பட்டம்,
பதவி உயர்வு,
பாட்டு,
ஓவியம்,
ஓட்டப்பந்தயம்,

இந்த வரிசையில்
ஓர் சான்றிதழ்
என் கையில்

இறப்பு சாதனையா ?


2.

இடது கையில் கட்டு கட்டாய் காப்பீட்டுத் தொகை
வலது கையில் ஓர் காகிதத்தோடு
பேருந்தில் நிற்கிறான் தகப்பன்
ஏனோ கனக்கிறது வலது கை மட்டும்
இறப்புச் சான்றிதழ் என்பதாலோ ?!


3.

மங்கலாய் தெரிந்த
தொலைபேசியின் ஒலிகேட்டு கண் துடைக்கிறாள்
அழைத்திருப்பது தன் கணவன் என்றெண்ணி
எதிர்முனையில் குரல் கேட்ட பின்பு
மீண்டும் கண்ணீரில் மூழ்குகிறது அவள் கண்கள்
பதினாறாம் நாள் அன்று !

4.

பலமுறை எனக்கு நடந்த நிகழ்வுகளை
திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறேன்..
நீயும் முகம் சுளித்ததில்லை
எனக்கு கதை சொல்லும் சுகம் கொடுப்பதற்காக !

எனக்கு நிகழ்ந்த உன் கதையை
உனக்கே சொல்ல காத்திருக்கிறேன்
உன் நண்பன் !

கவிதைகள்: என் பார்வையில் சில வார்த்தைகள்

- ஒற்றுமை
நம் வேற்றுமைகளை
மறந்து ஒற்றுமையாய்
சீரும் சிறப்போடும்
வெகு விமர்சையாய்
வேக வேகமாக
செய்கிறோம்...............................
பூமிக்கு ஒரு பிணப்பெட்டியை !
வாழ்த்துக்கள் !


- நேர்மை
அடுத்தவர் வயிற்றில் அடித்து
வாங்கிய பொருளை என்றும்
தன் உயர் அதிகாரிகளுடன்
பகிர்ந்துகொள்ள மறந்ததில்லை
அந்த நேர்மையான அதிகாரி

வாய் நிறைய
பாராட்டுக்கள் !
பதவி உயர்வு சான்றிதழோடு
ஓர் உயர் அதிகாரி..


- முன்னேற்றம்
அடுத்து என்னவென்று யோசிப்பதும்
அதை முயற்சிப்பதும் முன்னேற்றமாம்..
அடுப்பங்கரையை விட்டு வெளியேறியவள்
ஆடை விட்டு வெளியேற முயற்ச்சிக்கிறாள்.

இதில் தவறென்ன ?

கிசு கிசுக்களோடு
கைத்தட்டுகள்
தொலைகாட்சிப் பெட்டிக்குள் !

கவிதை: வேலை வாய்ப்பு

தன் தனிமையையும் தொலைத்து
தவறாமல் தண்ணீர் ஊற்றியவன்,
தான் அறுவடை செய்தது,
தன் தாகம்
தணிக்குமா
என்று,
சந்தையில்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறான்
தந்தை என்ற ஒரு விவசாயி !