குறுங்கவிதை

ஒரு பொய் பலர் பலமுறை
சொன்னதால் அது பலித்தது.
ஆம், அரசியல் ஒரு சாக்கடை !

ஹைக்கூ

பல வித பழங்கள் காய்க்கும்
ஒற்றை மரம்,
அன்னை !

கவிதை: வண்டி எப்படி இருக்கு



இரண்டு புதிய ஓட்டுனர்கள்
ஒருவரிடம் Break-க்கும், Gear-ரும்
மற்றவரிடம் Clutch-ச்சும் Acclerator-ரும்

நகர்கிறது
மலை வளைவுகளை நோக்கி !

அந்த நான்கு சக்கர வண்டி !

ஒருவழியாய் முடிந்தது இந்த
கல்யாணம் !

களைந்து போனது
பெருமூச்சு விட்ட
பெருசுகள் !

அது சரி
உங்க வண்டி எப்படி இருக்கு ?

கவிதை: நான் புதுசு !

வெலகி போகுது மேகம் !
வெலகி போகுது மேகம் !

இப்ப தெரியுது பாரு வானம் !

ஆனா அங்க என் ஒயிட்டு கலர்
நிலா வத்தான் காணோம் !

வந்துச்சு பாரு கோவம் !
அதனால குடிச்சேன் ஒரு பானம் !

அப்புறம் என்ன
கப்பல் ஏற ஆரம்பிச்சது என் மானம் !

தள்ளாடி நடந்தேன் வீட்டுக்கு, வீதியில !
மப்பு மண்டைக்கு ஏறிடிச்சு பாதி வழியில !

தடுமாறி நடந்தவன தட்டி விட்டது கல்லு !
விழுந்ததுல எகுரீடுச்சு என் பல்லு !
ஒடஞ்சு போச்சு இடுப்புல இருந்த full-லு !

தூக்கிவிட்டான் வெறும்பய ஒருத்தேன் !
அட அது என் ஆளோட பழைய ஆளு, சுரேந்திரன் !

டேய் ரோடு பூரா தண்ணி !
பாத்து போடா பண்ணி !
என்றான் இந்த புதுசுக்கு !

போடா சு______
என்றேன் அந்த பழசுக்கு !

சாரி பாஸ்,
அவன் பழசு இல்ல
பழசுல பழசு !
ஆனா நான் புதுசு
but பழசுல புதுசு !



வாசிப்புக்கு நன்றி.