கவிதை: நம்மவள் கல்யாணி

இயந்திரம் போல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது
இந்த
வாழ்க்கை!

எப்போதாவது பசிக்கிறது
அப்போதுதான் உணர்கிறேன்
மனிதன் என்று!

இதற்கும் இடையில்
இதயப் பறவையை
தூது அனுப்புகிறேன்

சேதியை சேர்ப்பதற்குள்
பறவை படுகொலை
செய்யப்படுகிறது!

கொலையாளிக்கு பரிசு என்னவள்
எனக்கோ கல்யாணி!.

கவிதை : பச்சை புறா ??????????

திண்ணையில்
அழகாய்
ஒரு பச்சை
புறா!

பச்சை புறா ??????????

காண அரிதென்று
நினைத்து
படம்
பிடிப்பதற்குள்
பறந்துவிட்டது!...

புண் முறுவல் இட்டு
என் தலை தட்டினேன்!

புறாவை பறக்கவிட்டதர்க்காக
இல்லை
என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!....

கவிதை: மதி இழக்கிறேனா ?

தன் உறுப்பை கூட காண
முடியாமல் சிலர்.....

நானோ
கண் சுழட்டுகிறேன்

அங்கும் இங்குமாய்
அலையும் அங்கம்
கண்டு மகிழ!


தன் பெயரை கூட
கேட்க்க முடியாமல் சிலர்....

நானோ
புலம்புகிறேன்

என் புகழை
ஏன் பாடவில்லை
என்று!


வாய் இருந்தும் குரல்
எழுப்ப முடியாமல் சிலர்.....

நானோ
வாய்க்கு வந்தபடி
வாதாடினேன்

என் பேச்சை
ஏன் கேட்க்கவில்லை
என்று!


மதி இழக்கிறேனா ?
இல்லை
இது தான்
விதியா ?

விதி என்றால்

என்
மதி இந்த
விதியை வெல்லுமா ?...