கவிதை:கோடை மழை


ஒரு ஏட்டில் எழுதப்பட்ட நான்கு வரிகள்
உரக்க வாசித்தப்பின்
உயிர் பெறுகிறது இறந்துபோன மயிர்களும்
"நாளை முதல் ஜூன் 6 வரை முழு
ஆண்டுத் தேர்வு விடுமுறை" !


கேள்வியே புரியாதவன்
வேகவேகமாய் கிறுக்குகிறான்
கேள்விகளுக்கு விடைத் தெரிந்தவன் போல


கடைசி பரிட்ச்சையின் விடைத்தாளில்
கடைசி வரியில் முற்றுபுள்ளி வைத்துவிட்டு பெருமூச்சு
எவரெஸ்ட் மலை உச்சியில் கொடி நட்டவன் விட்ட அதே மூச்சு !


விடைத்தாளை வாத்திச்சி கையில் விட்டெறிந்துவிட்டு !
காலடி எடுத்து வைக்கிறான்
அவன் ஒரு வருடமாய் சிறை பட்டுக் கிடந்த
வகுப்பறையை விட்டு

புத்தகங்களின் பக்கங்கள் பறக்கிறது !
இதழ்களில் புன்னகைகள் தெறிக்கிறது !


இவர்கள் விடுதலை கொடுத்த பேனா மையும்
இவர்களை குஷி படுத்துகிறது
அடுத்தவன் சட்டையில் கோலமிட்டு !


போட்டிப் போட்டு படிக்காத கூட்டம்
போட்டிப் போட்டு சந்தோஷப் படுகிறது !


போதாகுறைக்கு ஒருவன்
சட்டை வேற கிழிந்து தொங்குகிறது
இவர்களை இன்னும் சிரிக்க வைக்க !


கை, கண், கால், வாய் என
உடம்பே சிரிக்கிறது !


வருடத்தில் ஒரு முறை வரும்
இந்த காட்ச்சியைப் பார்க்கத்தான்
ஏழைச் சூரியனும் பூமியில் தரை இறங்க முயற்சிக்கிறான்
இதை உணர்த்துகிறது
கோடை வெயில் !


இதை பலர் புரிந்து கொள்வதில்லை
என்பதனால் கண் கலங்குகிறது
கோடை மழையாய் !