ஹைக்கூ: மன்னிப்பு

1.
உறவை புதுப்பிக்க
விடுக்கப்படும் விண்ணப்பம்,

2.
முடிந்த வரை கேட்காமல் இருப்பது
கேட்டால் உடனே கொடுப்பது

3.
கசப்பும் இனிப்பும் கலந்த
ஒற்றை வார்த்தை

4.
நெஞ்சின் ஈரத்தை அளந்து காட்டும்
அளவுகோல்

ஹைக்கூ : உலக அழகி

ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் பண்ணலாம்,
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !

கவிதை:நான்

orkut - About me sectionனுக்காக எழுதியது.


விடிந்தும்
விழிக்காதவன் !

விழித்தாலும்
பல்விலக்காதவன் !

பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !

குளித்தாலும்
சாப்பிடாதவன் !

இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !

பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !

சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !

பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !

சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !

ஆங்கிலம்
அதிகம்
பேச விரும்பாதவன்,
தமிழுக்கு
தலை வணங்குபவன் !

முதல் சம்பளமாய்
ஐந்து ரூபாய் வாங்கியவன் !
அதை என்னை சுமந்தவளிடம்
கொடுத்து, அவளின் பாராட்டு
மழையில் நனைந்தவன் !

சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !

பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !

வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !

பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !

கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !

தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !

காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !

தமிழில் பிழைகளோடு
சில வரிகளை கிறுக்கி,
அதன் முடிவில்
ஆச்சிரியக்குறி போட்டுவிட்டு !
நானும் கவிஞன் என்று
ஊருக்குள் திரிபவன் !

கரூரில் கருப்பாய்
கருவறையில் இருந்து
பூத்தவன் !
ஈரோட்டில்
நெஞ்சில்
ஈரத்தோடு மிகவும் வளர்ந்தவன்!
பிளைப்புக்காக ஹைதராபாத்தில்
தஞ்சம் அடைந்தவன் !

முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !

பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?

ஹைக்கூ

ஆயுதங்களிலேயே வலிமையான ஆயுதத்தோடு !
சத்தமின்றி நடக்கும் ஒரு சிற்றரசனின் ( சிற்றரசியின் )
தனி மனித யுத்தம் !

தேர்வு !

கவிதை:மேகம்

அரைமணிநேரம் ஊர் எல்லைகள்
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !

உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !

காற்றோடு
கரைந்து போனது !

வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !

கவிதை : மச்சி நீ பிசுருடா !

மது மயக்கத்தில்
பாதி !

மாதுவின்
மடியில்
மீதி !

விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !

நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !

நினைத்ததை
இன்றே முடித்துவிடு !

நாளை உன்னுடயதாக்கி
விடு !

மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !

வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.


எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.

ஹைக்கூ

எல்லோராலும் போற்றப்படுவது,
தனக்கென வரும்பொழுது ஏற்க மறுப்பது
கலாச்சாரம்!.

கவிதை:சுவாசம் குடித்ததடி!

உன்
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!

அனால் உயிர்
இழக்கவில்லை!

பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !