அழகு

ஹைகூக்கள்: உறக்கம்

தலைப்பு இவருது



1.
சிலர் வருண பகவான் அவதாரம் எடுக்கும் நேரம்
படுக்கையை ஈரமாக்க !

2.
தலையணையும் தம்மன்னா(நடிகை) ஆகும்
சற்று தலை தூக்கிப் பார்த்தால் நண்பனின்
தலையும் அதே தலையணையில் !

3.
தேவதைகள் உலா வருவார்கள்
தெருவில் பார்த்த அவளும் அதில் அடக்கம்
அவள் குழந்தையோடு !

4.
அரை தூக்கத்தில் தேடுவான் பின்பு
அரைமணி நேரம் கழித்து
அறை முழுவதும் தேடுவான்
அவன் லுங்கியை !

5.
இரவு முழுவதும் குடித்து விட்டு குத்தட்டாம்
காலையில் மடிந்து கிடக்கிறது
கொசுக்கள் !



கவிதைகள்: ஓர் நிகழ்வின் நினைவுகள்

1.

சாதனைக்கு சன்மானமாய்
சான்றிதழ்கள்

பிறப்பு,
படிப்பு,
பட்டம்,
பதவி உயர்வு,
பாட்டு,
ஓவியம்,
ஓட்டப்பந்தயம்,

இந்த வரிசையில்
ஓர் சான்றிதழ்
என் கையில்

இறப்பு சாதனையா ?


2.

இடது கையில் கட்டு கட்டாய் காப்பீட்டுத் தொகை
வலது கையில் ஓர் காகிதத்தோடு
பேருந்தில் நிற்கிறான் தகப்பன்
ஏனோ கனக்கிறது வலது கை மட்டும்
இறப்புச் சான்றிதழ் என்பதாலோ ?!


3.

மங்கலாய் தெரிந்த
தொலைபேசியின் ஒலிகேட்டு கண் துடைக்கிறாள்
அழைத்திருப்பது தன் கணவன் என்றெண்ணி
எதிர்முனையில் குரல் கேட்ட பின்பு
மீண்டும் கண்ணீரில் மூழ்குகிறது அவள் கண்கள்
பதினாறாம் நாள் அன்று !

4.

பலமுறை எனக்கு நடந்த நிகழ்வுகளை
திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறேன்..
நீயும் முகம் சுளித்ததில்லை
எனக்கு கதை சொல்லும் சுகம் கொடுப்பதற்காக !

எனக்கு நிகழ்ந்த உன் கதையை
உனக்கே சொல்ல காத்திருக்கிறேன்
உன் நண்பன் !

கவிதைகள்: என் பார்வையில் சில வார்த்தைகள்

- ஒற்றுமை
நம் வேற்றுமைகளை
மறந்து ஒற்றுமையாய்
சீரும் சிறப்போடும்
வெகு விமர்சையாய்
வேக வேகமாக
செய்கிறோம்...............................
பூமிக்கு ஒரு பிணப்பெட்டியை !
வாழ்த்துக்கள் !


- நேர்மை
அடுத்தவர் வயிற்றில் அடித்து
வாங்கிய பொருளை என்றும்
தன் உயர் அதிகாரிகளுடன்
பகிர்ந்துகொள்ள மறந்ததில்லை
அந்த நேர்மையான அதிகாரி

வாய் நிறைய
பாராட்டுக்கள் !
பதவி உயர்வு சான்றிதழோடு
ஓர் உயர் அதிகாரி..


- முன்னேற்றம்
அடுத்து என்னவென்று யோசிப்பதும்
அதை முயற்சிப்பதும் முன்னேற்றமாம்..
அடுப்பங்கரையை விட்டு வெளியேறியவள்
ஆடை விட்டு வெளியேற முயற்ச்சிக்கிறாள்.

இதில் தவறென்ன ?

கிசு கிசுக்களோடு
கைத்தட்டுகள்
தொலைகாட்சிப் பெட்டிக்குள் !