கவிதை:14 - வாழ்கையின் எடுத்துக்காட்டுகள்

எதிரிகள் இல்லாத எல்லை,
குடித்து விட்டு கூச்சலிடாத குடிகாரன்,
தன் உடலை ஒளிபரப்பாத பெண்,
மாடி வீடு இல்லாத முதலாளி,
பிச்சை பாத்திரம் ஏந்தாத பிளாட்பாரம்,
உதிரம் உறிஞ்ஜாத உயிர்,
எதையும் எதிர் பாக்காத நட்பு,
ஊடல் இல்லாத உடன் பிறந்தோர்,
விளம்பரப் படுத்திக்கொல்லாத மனிதன்,
மாணவனுக்காக காத்திருக்கும் ஆசிரியர்,
வஞ்சம் இல்லாமல் பாராட்டுபவன்,
படுத்தவுடன் உறங்குபவன்..........................

இவை அனைத்தும் பள்ளியறையில்
ஆழமாய் போதிக்கப்பட
வேண்டிய எடுத்துக்காட்டுகளே!

நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

2 comments:

  1. /இவை அனைத்தும் பள்ளியறையில்
    ஆழமாய் போதிக்கப்பட
    வேண்டிய எடுத்துக்காட்டுகளே!/

    சும்மா நச்சுனு இருக்கு நண்பா, இந்த டெம்பெள்ட் தான் நான் முன்னாடி வைத்து இருந்தேன் நல்ல ராசியான டெம்பெள்ட்

    ReplyDelete
  2. ராசியாயாயா !, யோகம் அடித்தால் சரி நண்பரே

    ReplyDelete