கவிதை 18:பதிலுக்காக காத்திருக்கிறேன்



வாழ வைக்கும் விஞ்ஞானத்தை
மூடர்களுக்கு புரிந்த
மூடநம்பிக்கையில்
விளக்கினாய்,

தோற்றவனுடைய கோபத்தை
களிமண் போல்
கரைத்தாய்,

உன் மேல் போட்டிக்காக எறிந்ததை
குதிக்க வைத்து
குதிக்க வைத்து
குதூகலப் படுத்தினாய்,

விண்ணில் இருந்து
வாழ வந்தவர்களை
ஆரவாரமிட்டு
அடைக்கலம் தந்தாய்

நீ இல்லை என்றால் ஊரே
கண் கலங்குகிறது,

உன் வருகை
வீதி எங்கும்
விழா கோலமாகிறது,

உன்னை போல் வாழ
அறிவுரை செய்யமாட்டயா ?

என்று கேள்வியை
கேட்டு
விட்டு,

பதிலுக்காக காத்திருக்கிறேன்,

குளத்தங்கரையில்....

2 comments: