கவிதைகள்: ஓர் நிகழ்வின் நினைவுகள்

1.

சாதனைக்கு சன்மானமாய்
சான்றிதழ்கள்

பிறப்பு,
படிப்பு,
பட்டம்,
பதவி உயர்வு,
பாட்டு,
ஓவியம்,
ஓட்டப்பந்தயம்,

இந்த வரிசையில்
ஓர் சான்றிதழ்
என் கையில்

இறப்பு சாதனையா ?


2.

இடது கையில் கட்டு கட்டாய் காப்பீட்டுத் தொகை
வலது கையில் ஓர் காகிதத்தோடு
பேருந்தில் நிற்கிறான் தகப்பன்
ஏனோ கனக்கிறது வலது கை மட்டும்
இறப்புச் சான்றிதழ் என்பதாலோ ?!


3.

மங்கலாய் தெரிந்த
தொலைபேசியின் ஒலிகேட்டு கண் துடைக்கிறாள்
அழைத்திருப்பது தன் கணவன் என்றெண்ணி
எதிர்முனையில் குரல் கேட்ட பின்பு
மீண்டும் கண்ணீரில் மூழ்குகிறது அவள் கண்கள்
பதினாறாம் நாள் அன்று !

4.

பலமுறை எனக்கு நடந்த நிகழ்வுகளை
திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறேன்..
நீயும் முகம் சுளித்ததில்லை
எனக்கு கதை சொல்லும் சுகம் கொடுப்பதற்காக !

எனக்கு நிகழ்ந்த உன் கதையை
உனக்கே சொல்ல காத்திருக்கிறேன்
உன் நண்பன் !

2 comments:

  1. நல்லக்கவிதை. இறப்பு ஒரு முறை அது வரும் வரை நன்முறையில் வாழ் . இறந்த பின் ,நீ வாழ்வாய் .

    ReplyDelete
  2. வாசித்ததுக்கு நன்றி சரவணன் !

    //இறப்பு ஒரு முறை அது வரும் வரை நன்முறையில் வாழ் .
    இறந்த பின் ,நீ வாழ்வாய் //

    உண்மைதான்

    ReplyDelete